இந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே கொரோனா தொற்று ஆரம்பமாகிவிட்டது. இந்த தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீவிரமடையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் போடப்பட்ட முழு ஊரடங்கு தற்போது வரையில் தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது.
இந்தியாவில் இந்த தொற்று மிக அதிகமாக பரவ தொடங்கியது. எடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக இந்தத் தொற்றின் வேகம் வெகுவாக குறையத் தொடங்கியது.இந்த தொற்று இந்தியா முழுவதிலும் மிக வேகமாக பரவ தொடங்கியது. அடுத்து உலக நாடுகள் அனைத்திலும் இந்த தொற்றிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
முதலில் உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் பரவலின் வேகத்தை கண்டு என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துப்போய் தான் இருந்தார்கள். ஆனால் இந்திய அரசின் அதிரடி நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொண்டு வந்தது.இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது அதை தொடர்ந்து படிப்படியாக தொற்றின் வேகம் குறைய தொடங்கியது. இதனை பார்த்த உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பின்பற்றி அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.
அதேபோல ஒருவரை ஒருவர் தொட்டால் இந்த தொற்று பரவும் என்ற காரணத்தால், அனைவரும் தமிழ் முறைப்படி ஒருவரை ஒருவர் தொடாமல் வணக்கம் செலுத்தி அவரவர்களுக்கான மரியாதை கொடுக்கத் தொடங்கினார்கள்.பொதுவாக மேலைநாடுகளில் மரியாதை நிமித்தமாக கை குலுக்குவது வழக்கம் ஆனால் ஒருவரை ஒருவர் தொட்டால் இந்த தொற்றின் பரவல் அதிகமாகும் என்ற காரணத்தால், அனைவரும் இந்திய நாட்டின் தமிழ் முறைப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்து அவரவர் மரியாதையை செலுத்த தொடங்கினார்கள்.இதனை அடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுக்க தொடங்கினர்.
ஆனாலும் உலக வல்லரசாக விளங்கிவரும் அமெரிக்கா இந்த நோய்களில் இருந்து இதுவரையில் மீண்டதாக தெரியவில்லை. அந்த அளவிற்கு அந்த நாட்டில் இந்த நோய்த்தொற்றின் பரவல் அதிகமாக காணப்படுகிறது.இந்திய அரசின் அதிரடி நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனாவிற்க்கான தடுப்பு மருந்து தயாரித்து விநியோகம் செய்யப்பட்டது. அதோடு அது பொதுமக்களுக்கும் செலுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா படிப்படியாக குறையத் தொடங்கியது.
ஆனால் தற்சமயம் இந்தியாவில் இந்த தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. அதேபோல நாட்டில் தடுப்பூசி தொடர்பான வேலைகளும் தன்னுடைய அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்த விதத்தில் 60 வயது இருக்கும் அதிகமானவர்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 17ஆம் தேதி இன்றைய தினம் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனும் காணொளி மூலமாக உரையாற்ற இருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களின் பாதிப்பு நிலவரங்கள் தொடர்பாக கேட்டறிய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாகவும் அவர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.