Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

பாரத பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் ன. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தற்போது வரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 100 கோடி மைல்கல்லை இந்தியா நேற்று தான் எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 29,53,02,676 பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த தடுப்பூசி சாதனை சர்வதேச நாடுகளை வியக்க வைத்துள்ளது. வெறும் ஒன்பது மாதங்களில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்தியா.

ஜனவரி மாதம் மெதுவாக தொடங்கிய தடுப்பூசி போடும் பணி அதன்பின் வேகமெடுத்து தற்போது தினமும் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசவுள்ளார். 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 100 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டது குறித்து, பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் “இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்த சாதனையை வெற்றிகரமாக முடித்ததற்காக நான் மக்களிடம் நன்றி தெரிவிக்கிறேன் நாம் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது.

மேலும், நாட்டின் 130 கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று இந்த தடுப்பூசி பணிகளுக்காக உழைத்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். மேலும், பிரதமர் மோடி வேறு ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.

Exit mobile version