gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையாகிறது.
சீனாவிற்கு அடுத்தபடியாக அதிகமான தங்கம் விற்பனை செய்யப்படும் நாடாக இந்தியா உள்ளது. தங்கம் விலை நாளுக்குநாள் ஏற்றத்தை கண்டு வருகிறது. இந்த வருடம் அக்டோபர் மாதம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏற்றுவது இறங்குவதுமாக இருந்தது.
டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை டிசம்பர்-11 அன்று ,ஒரு சவரன் ரூ. 58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன் நிலையில் டிசம்பர்-13 ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,230 க்கும் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து இருக்கிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.57,840 க்கு விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது உள்ளது. நேற்று டிசம்பர்-16 ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையானது. இன்று டிசம்பர்-17 ஒரு தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து உள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.100-க்கு.ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சமாக விற்பனையாகி வருகிறது.