தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் தனுஷ், நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது, எழுத்து, இயக்கம் என சினிமாத்துறையின் பல்வேறு பரிமாணத்தில் இயங்கி வருகிறார்.இவர், தனக்கென ஒரு இடத்தை எப்பொழுதுமே பெற்றிருப்பார்.
2002ல் வெளியான “துள்ளுவதோ இளமை” கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனுஷின் தனித்தன்மை வாய்ந்த குரலினால், புதுப்பேட்டை படத்தில் அவர் பாடிய, “எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் மூலம் பரவலாக கவனம் பெற்றது.
அதன்பின் “ஆடுகளம்” படத்திற்காக “தேசிய விருது” பெற்றது மட்டுமல்லாமல், “ஒய் திஸ் கொலவெறி” பாடல் மூலம் சர்வதேச அளவில் இவரைத் திரும்பிப் பார்க்க வழிவகுத்தது.
அதன்பின் கருத்துச் செறிவு மிக்க பாடல்களை எழுதத் தொடங்கினார். “பா.பாண்டி” படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்து முதிர்ச்சியான படைப்பை உருவாக்கினார்.
இவருடைய தரமான படங்களின் தயாரிப்புகள் காக்கா முட்டை, விசாரணை போன்றவை சர்வதேச விருதுகளுக்கு அங்கீகாரம் பெற்றது.
ஒரு நடிகர் என்பதை தாண்டியும் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என தொடர்ந்து பன்முகத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தனுஷின் பிறந்தநாளை, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.