இன்று (டிச.5) ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கி வைத்த பிரதமர் மோடி!!

0
114
Today (Dec. 5) Prime Minister Modi launched projects worth Rs.12,200 crore!!

டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருபுறம் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் டிசம்பர் 5 ஆகிய இன்று ரூ.12,200 கோடி மதிப்பில் பல திட்டங்களை இன்று துவங்கி வைத்திருக்கிறார்.

பிரதமர் மோடி துவங்கி வைத்த திட்டங்கள் பின்வருமாறு :-

✓ ரூ. 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத் முதல் நியூ அசோக் நகர் இடையே பாரத் வழித்தடத்தின் 13 கிமீ தூரத்தை முதலில் துவங்கி வைத்துள்ளார்.

✓ ரூ.1,200 கோடி மதிப்பிலான டெல்லி மெட்ரோ 4ஆம் கட்டத்தின் ஜனக்புரி மற்றும் கிருஷ்ணா பார்க் இடையேயான 2.8 கிமீ தூரத்தையும் திறந்து வைத்துள்ளார்.

✓ ரூ.6,230 கோடி ரூபாய் மதிப்பிலான ரிதாலா முதல் குண்ட்லி வரை 26.5 கி.மீ. நீளமான டெல்லி மெட்ரோ பாச்சு-IV இன் புதிய பகுதியில் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

✓ ரூ.185 கோடி ரூபாய் மதிப்பில் ரோஹினியில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய கட்டிடத்தின் அடிக்கல்லையும் நாட்டி வைக்க உள்ளார்.

இந்த திட்டங்களின் மூலம் ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை வசதிகளையும் இது மேம்படுத்துவதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போக்குவரத்து மற்றும் சுகாதார அமைப்புகளையும் மேம்படுத்துவதாக இத்திட்டங்கள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.