இன்று திங்கட்கிழமை ( பிப்ரவரி 17 ) சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்க பதிவுத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பதிவு துறையின் உத்தரவின் பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 100 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் சுபமுகூர்த்த தினமான இன்று 150 டோக்கன்கள் வழங்கவும், அதேபோன்று 2 சார்பதிவாளர்கள் இருக்கக்கூடிய அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்க வேண்டும் என பதிவுத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்த சுப முகூர்த்த நாளில் தங்களுடைய சொத்து பத்திரங்கள், புதிய நில பதிவுகள் போன்ற முக்கிய வேலைகளை முடிக்க வேண்டும் என மக்கள் பலரும் எதிர்பார்க்கும் வண்ணம் அரசு சார்பில் இது போன்ற கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுவதாக பத்திரப்பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இது போன்ற வேலைகளை முடிக்க நினைப்பவர்கள் டோக்கன் மழை பெற்று அவர்களுக்கு உண்டான நேரத்தில் பத்திரப்பதிவு துறையில் தங்களுடைய பத்திரப்பதிவு வேலைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.