இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

0
127

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால்  சென்னையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சனிக்கிழமை அன்று அனைத்து மளிகைக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளில் நேற்று மாலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பெரும்பாலான கடை உரிமையாளர்களும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி முககவசம் மற்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றுங்கள் என வலியுறுத்துகின்றனர். ஆனால் மக்கள் கேட்டபாடில்லை.

காசிமேடு, சிந்தாதிரிபேட்டை, வானகரம் போன்ற மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக அலைமோதுகிறது. போலீசார் சமூக இடைவெளியை பின்பற்ற சொல்லி வலியுறுத்தியும் மக்கள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால் தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.