gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.57,200 க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரம் உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை என சொல்லப்பட்ட நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக உயர்ந்தது.
இருப்பினும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதாவது, டிசம்பர்-19 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், டிசம்பர்-20 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வந்த நிலையில் டிசம்பர் 21 விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனையானது.
டிசம்பர் 24 தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,720-க்கு விற்பனையானது. நேற்று டிசம்பர்-25 க்கு பிறகு விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. நேற்று, டிசம்பர் 26 கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,125க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,000க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் மீண்டும் இன்று டிசம்பர் 27 தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து இருக்கிறது.
எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. இன்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.100க்கு, ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சமாக விற்பனையாகிறது.