Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020

நாள் : 04.08.2020

தமிழ் மாதம்: ஆடி 20 செவ்வாய்க்கிழமை.

நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

ராகு காலம்: 

3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: 

காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை.

திதி: 

பிரதமை திதி இரவு 9.55 வரை அதன் பின் தேய்பிறை திதி.

நட்சத்திரம்:

திருவோணம் காலை 8.11 மணி வரை அதன் பின் அவிட்டம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. கரி நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களது மனநிலை குழப்பத்துடன் இருக்கும். எதனை செய்தாலும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேசுங்கள்.வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருகும் நாள். குழப்பமான நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்கள்  ராசிக்கு மிக சிறப்பாக இருக்கும் .உற்றார் உறவினர்கள் தேடிவந்து உறவாடி மகிழ்வார்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களில் புதியோர் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். உறவு மேலோங்கும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு தாராளமாக தன வரவு வரும். கடன் பிரச்சினை தீரும். சுப காரியத்தில் ஈடுபட்டுள்ள பணிகள் விரைந்து முடிவடையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் மறையும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். தன வரவு வரும் நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்றைக்கு உங்களது குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்களில் முன்னேற்றம் வரும்.தொழில்களில் ஒரு சில மாறுதல்களை கொண்டு வரும்பொழுது லாபத்தை ஈட்டலாம். கொடுக்கல் வாங்கலில் திருப்தி அடைவீர்கள்.வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு உயரும். லாபம் ஈட்டும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாளில் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முதலில் சிந்தியுங்கள். அப்புறம் செயல்படுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை செலவுகள் நேரிடலாம்.தொழில் வளர்ச்சிக்காக ஈடுபடும் வகையில் லாபம் வரும்.பணவரவு தட்டுப்பாடின்றி வரும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று திடீர் பண வரவால் உங்களது உள்ளம் மகிழ்ச்சி அடையும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் மதிப்பு கூடும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி கிட்டும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும் நாள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களே இன்று நிம்மதி குறைய வாய்ப்புள்ளது.கணவன் மனைவிக்கிடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.திருமண முயற்சி கைகூடும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களிடம் நல்வரவு கிட்டும். நன்மை பயக்கும் நாள்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்று நீங்கள் எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களால் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நண்பர்களால் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கை வந்து சேரும். சுறுசுறுப்புடன் காணப்படும் நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழந்தைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியுடன் நட்பு கிடைக்கும். அரசுத் தரப்பில் உதவிகள் கிடைக்கும்.வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது.அதனால் தொழில் நீட்டிக்கப்படும். நட்பு கிடைக்கும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் பண வரவு தாராளமாக கிடைக்கும். பழைய பாக்கிகள் தீரும். தொழில் சம்பந்தமாக போடப்பட்ட திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சேமிப்பை உயர்த்திக் காட்டுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே திடீரென நீங்கள் எதிர்பார்க்காத வகையில் பணவரவு கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களை மதிப்பார். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு சார்பில் இருந்து உதவிகள் வரும். கொடுக்கல் வாங்கலில் குறைவாக லாபம் வரும். பணவரவு கிடைக்கும் நாள்.

மீனம்:

மீனு ராசிக்காரர்களளே இன்று உங்களது உடல் நிலையில் சிறிது மந்த நிலை காணப்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து வரும். வேலை சம்பந்தமான முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன் தொல்லை நீங்கும். தெய்வ வழிபாடு செய்வதால் நன்மை பிறக்கும். ‌ தெய்வ வழிபாடு செய்யும் நாள்

Exit mobile version