Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றைய ராசி பலன்- 18.08.2020

இன்றைய ராசி பலன்- 18.08.2020

நாள் : 18.08.2020

தமிழ் மாதம்:

ஆவணி 2 செவ்வாய்க்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 3.00 முதல் 4.30 வரை.

எம கண்டம்: 

காலை 9.00 முதல் 10.30 வரை.

குளிகன்:

பகல் 12.09 முதல் 1.30 வரை,

திதி:

இன்று தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 10.40 வரை பின்பு அமாவாசை.

நட்சத்திரம்:

ஆயில்யம் நட்சத்திரம் பின் இரவு 04.08 வரை பின்பு மகம்.

இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இன்று நவகிரக வழிபாடு செய்வது நல்லது. இன்று கரி நாள். இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்கள் விரும்பியது கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் சோர்வு காணப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும். தொழிலில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் பல நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியே அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கப் பெறும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு அமைதியை கடைபிடிக்க வேண்டியது இருக்கும். எதிலும் எச்சரிக்கை மனப்பான்மையுடன் செயலாற்றுவது வீண் செலவு ஏற்படுத்தாமல் தவிர்க்கலாம். தக்க சமயத்தில் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் தடங்கலின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று கைகூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உழைப்பிற்க்கு ஏற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது..

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு மற்றவர்களினால் அதிக கோபம் வரக் கூடும் . எனினும் உங்களை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் தேவையற்ற செலவுகளால் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நன்மைகளைத் தரும்.

Exit mobile version