Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தமிழகம்  முழுவதும் விடுமுறை! அரசு அலுவலகங்கள் இயங்காது!

Today is a holiday across Tamil Nadu! Government offices do not work!

Today is a holiday across Tamil Nadu! Government offices do not work!

இன்று தமிழகம்  முழுவதும் விடுமுறை! அரசு அலுவலகங்கள் இயங்காது!

தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று  வருகின்றது. இந்நிலையில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பை யுகாதி முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலக அலுவலகங்களும் இயங்காது என தெரிவித்துள்ளது.

வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிகர்கள் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும். இந்த சேவை இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version