இன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0
101
Today is a holiday for schools in 19 districts!! School education announcement!!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் கனமழை கொட்டிவரும் நிலையில், அரையாண்டு தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை ஆனது வெளுத்து வாங்கி வருகிறது.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

இதனால் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டங்கள் பின்வருமாறு :-

சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு குறித்த பள்ளி கல்வித்துறையின் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பது :-

கனமழை காரணமாக 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு இன்று ஆங்கில தேர்வு நடக்கவிருந்த நிலையில், அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடத்துவதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.