Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?

பொதுவாக சிலர் நினைப்பதுண்டு. இது ஆடி மாதம் ஆயிற்றே எப்படி இதில் ஆவணி அவிட்டம் வரும் என்று

ஸ்ராவண மாதம் எனப்படும் சந்திரனை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசையில் இருந்து பௌர்ணமி அமாவாசை வரையிலான அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது.

இதனால்தான் இன்று ஆவணி அவிட்டம் என்று சொல்கிறார்கள்.

ஆவணி அவிட்டம் என்பது நமது மரபு வகையான வைதீக முறைகளை புதுப்பித்துக் கொள்வதற்கு இது கொண்டாடப்படுகிறது. பொதுவாக இந்துக்களால் இது கொண்டாடப்படுகிறது.இந்துக்கள் ஆயினும் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு குல வழக்கங்கள் உண்டு. ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒரு சில பண்புகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் வேறுபடும்.

ஒவ்வொருத்தரின் குல வழக்கப்படி அவர்களுக்கென்று தனியான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். எடுத்துக்காட்டாக முப்புரிநூல் எனப்படும் பூணூல் அணிதல்.

பிராமணர்கள் மட்டுமின்றி ஒருசில செட்டியார்கள், வன்னியர்கள், விஸ்வகர்மாக்கள், வைசியர்கள் என பல தரப்பினரும் பூணூல் அணிவது வழக்கம்.

பொதுவாக ஆவணி அவிட்டம் என்றால் எல்லோருக்கும் பூணூல் மாற்றுவது மட்டும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆவணி அவிட்டம் கல்விமுறையை குழந்தைகள் தொடங்குவதற்கான நல்ல நாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கல்வி கற்பித்தல், கல்வி பயிலுதல் போன்ற நல்ல காரியங்கள் ஆவணி அவிட்டத்தில் செய்யப்படுகின்றன.

முற்காலத்தில் சிறுவர்களை கல்வி பயில அனுப்பும் பொழுது அனைத்து விதமான கல்வியும் கற்க வேண்டும் என்று உபவீதம் எனும் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரத்தை சொல்லி அனுப்பி வைப்பார்களாம். இன்று ஏதேனும் ஒரு சமூகத்தினர் மட்டுமே பின்பற்றுகின்றனர்.

ஆவணி அவிட்டத்தின் போது ஒரு கல்வி கற்கும் முறையை ‘உபாகர்மா’ என்கிறார்கள். பொதுவாக ஸ்ராவண மாதம் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ஆடி அமாவாசையில் இருந்து ஆவணி அமாவாசை வரை அவிட்டம் நட்சத்திரத்தில் அல்லது பௌர்ணமி திதியில் ஒரு கல்வியாண்டு தொடங்குகிறது.

இறைவன் தந்த இந்த பூமியானது சகல சௌபாக்கியங்களையும் நமக்கு அளிக்கிறது. அதேபோல் நன்மை தீமை என அனைத்தும் நாம் அறிவதற்கு கல்வி கற்க வேண்டும் என்பது நிதர்சனமான ஒன்று. அவ்வாறு பயிற்றுவிக்கும் முறையை நாம் உபநயனம் என்போம். உபநயனம் என்றால் ஞானக் கண் என்றும் ஒரு பொருள் உள்ளது.

உபநயனம் ஆண்டுதோறும் கற்று வந்துள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தில் தாங்கள் அணியும் பூணூலை மாற்றுவார்கள் இதனையே ஆவணி அவிட்டம் என்பார்கள்.

ஆடியில் வரலட்சுமி நோன்பு, காரடையான் நோன்பு என பெண்களுக்கு விரதங்கள் உள்ளன.ஆண்கள் கடைபிடிக்கும் ஒரு விழா இந்த ஆவணி அவிட்டம்.

ஆவணி அவிட்டத்தின் போது செய்ய வேண்டியவை:

ஆவணி அவிட்டத்தின் பொழுது காலையில் எழுந்து நீராடி திருநீறணிந்து புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

பிறகு எல்லா இஷ்ட தெய்வங்களையும் தேவர்களையும் அழைத்து மகா சங்கல்பம் செய்ய வேண்டும். மீண்டும் ஆற்றிலோ குளத்திலோ குளித்து அவரவர் வசதிக்கேற்றவாறு புதிய ஆடைகளை அணியுங்கள்.

அதன்பிறகு தந்தையோ அல்லது குரு மூலமாகவோ அல்லது வேறு யாரோ ஒருவரின் மூலமாக பூணூலை அணிவிக்க வேண்டும்.

திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணம் ஆனவர்கள் இரண்டு பூணூலையும், தந்தையை இழந்தவர்கள் மூன்று பூணூலையும் அணியவேண்டும்.

தான் என்ன நினைக்கிறீர்களோ அதை மனதில் நினைத்து நீங்கள் சிறக்க, உங்கள் குடும்பத்தார் சிறக்கவும் ,உங்கள் வாழ்வு சிறக்கவும் என நீங்கள் என்ன எண்ணுகிறீர்களோ அதை நினைத்து காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும். வைராக்கியம் போனால் சகலமும் போய்விடும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும் என்பதே ஆவணி அவிட்டத்தின் நோக்கமாகும்.

ஆவணி அவிட்டத்தின் சிறப்பு அறிந்து அதனை முறையாக கடைபிடியுங்கள். இறைவனடி சேருங்கள்.

Exit mobile version