Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவகார்த்திகேயனுக்கும் சூரிக்கும் இன்று மறக்க முடியாத நாள்!! அவங்களுக்கு இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? 

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காமினேஷன் படம் என்றால் அந்தப் படத்தில் சிரிப்பிற்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. கவுண்டமணி செந்தில் அப்புறம் சிவகார்த்திகேயன் சூரியின் காமினேஷன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தொடக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகர்களுக்கு எல்லாம் பெரும் போட்டியாக உருவெடுத்துள்ளார்.

அதே போன்று சாதாரண  மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக  தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் எந்த பிரபலங்களின் பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பின் மூலம் சினிமா துறையில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் எதார்த்தமான சூழலில் ஜோடி சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் படத்தை தாண்டி சொல்லுக்கும் இடையே ஒரு அண்ணன் தம்பி அந்நியோன்னியம் நிலவி வருகிறது.

இவர்களின் ஒற்றுமைக்கு சான்றாகவே ஆகஸ்ட் 27-ம் தேதி என இன்று இருவருக்குமே மறக்க முடியாத நாளாக உள்ளது அது என்னவென்றால்,  சூரி இன்று இப்பொழுது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி  தம்பதியர்கள் தங்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் சினிமா பிரபலங்கள்  மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

Exit mobile version