இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்!
ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒப்புக்கொண்டு அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே சி பழனிசாமியையும் கட்சி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்தனர்.
இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடக்கும் பொழுது அந்த தேர்தல் நடைபெறக்கூடாது என நீதிமன்றத்தில் கே சி பழனிசாமி மனு அளித்து அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நாளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் நினைவு தினம் வருவதையொட்டி, நாளை அவருடைய நினைவு தினம் இல்லை என புதியதாக சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரின் இறப்பில் சந்தேகம் உள்ளதை அடுத்து ஆறுமுகசாமி ஆணையம் நியமிக்கப்பட்டது ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த குழு அறிக்கை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையில் ஜெயலலிதா அவர்கள் நான்காம் தேதியை இறந்ததாகவும், ஆனால் அந்த தகவலை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஐந்தாம் தேதி தான் ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு இறந்ததாக தெரிவித்துள்ளனர் என கூறிருந்த நிலையில், இதனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வருவதாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கட்டாயம் நான்காம் தேதி தான் இறந்திருக்க வேண்டும் என்பது உண்மையாகிறது. எனவே மத்திய மற்றும் தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தை டிசம்பர் நான்கு என்ற தேதியில் மாற்றி அமைத்து அரசாணை திருத்தம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.அதோட இன்று ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவித்தார்.