Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தை அமாவாசை.. தர்ப்பணம் கொடுப்பதற்கான நேரம் மற்றும் விரத முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமாக உள்ள தை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை எப்படி சிறப்பானதாக பார்க்கப்படுகிறதோ அதேபோல் தான் இந்த தை அமாவாசையும் அதிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

நேற்று(ஜனவரி 28) இரவு 8:10 மணிக்கு தொடங்கிய இந்த அமாவாசை ஜனவரி மாதம் 29 ஆம் தேதியான இன்று இரவு 7:21 மணிக்கு முடிவடைய இருக்கிறது.இன்று புனித நீராடி நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் நம் தலைமைறையை தொடர்ந்து வரும் கர்மவினைகள்,துக்கம்,பாவங்கள் அனைத்தும் நீங்கும்.அதோடு நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம் மாநில மக்கள் இந்த தை அமாவாசை நாளில் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று அக்னீ தீர்த்தத்தில் நீராடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த சடங்கை காலை 6-7:20 வரை செய்யலாம்.

இந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் காலை 9-11:55க்குள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.உங்களால் ராமேஸ்வரம் வரை சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டிலேயே வழிபாடு மேற்கொள்ளலாம்.

வாழ்க்கையில் வெறும் கஷ்டத்தை மட்டுமே பார்க்கும் மக்கள் இந்த நாளில் பித்ருக்களின் வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.இந்த நாளில் காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை திதி கொடுக்க உகந்த நேரமாக உள்ளது.பித்ருக்களின் ஆசி கிடைக்க இந்த நாளில் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

தை அமாவாசை ஆரம்ப தேதி: ஜனவரி 29 புதன் கிழமை

அமாவாசை திதி ஆரம்ப நேரம் மற்றும் நாள்: ஜனவரி 28 இரவு 7:35 மணி

அமாவாசை திதி முடியும் நேரம்: ஜனவரி 29 மாலை 6:05 மணி

வாழ்க்கையில் நிம்மதி கிடைக்க மகிழ்ச்சியுடன் வாழ இந்த அமாவாசை நாளில் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

மேலும் தங்களால் முடிந்த உதவியை ஏழை மக்களுக்கு செய்தால் புண்ணியம் வந்து சேரும்.அன்னதானம்,பிண்ட தானம் போன்றவற்றை செய்தால் பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.இந்த நாளில் புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Exit mobile version