இன்று தான் இதற்கு கடைசி நாள்! விண்ணப்பிக்க தவறி விடாதீர்கள்!
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை இயற்றினார். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் என்றும் கூறினர். இத்திட்டம் வரவேற்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பே கிடைத்தது. இந்த திட்டம் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.பெண் பிள்ளைகளின் கல்வி இடைநிற்றலை தடுக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து முடித்துவிட்டு பதினொன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். நேற்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது வரை சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வராததால் அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு கொடுத்திருந்தார்.
தற்போது வரை இரண்டு லட்சத்திற்கும் மேல் மாணவிகள் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பத்து இருப்பதாக தெரிவித்தார்.இவ்வாறு இருக்கையில் ஆயிரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்க தவறிய மாணவிகள் நாளை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.இந்த www.penkalvi.tn.gov.in இணையத்தின் மூலமும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.