Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்ற இன்றே கடைசி நாள் : !

பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்ற இன்றே கடைசி நாள் : !

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி,ஆகஸ்ட் 16 ஆம் தேதி விண்ணப்ப படிவம் முடிந்தது.இதில் தமிழகத்தில் மொத்தம் 1,60,834 மாணவர்கள் விண்ணப்பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் , இந்த வருடம் 2000 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 1, 30,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள் ஆகும்.

Exit mobile version