Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று உலக எய்ட்ஸ் தினம்!! இந்த நாளுக்கான வரலாறும் முக்கியத்துவமும்!!

Today is World AIDS Day!! History and Significance for this day!!

Today is World AIDS Day!! History and Significance for this day!!

உலக எய்ட்ஸ் தினத்திற்கான வரலாறு :-

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.

தங்கள் யோசனையை எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிர் கொல்லி கொடிய நோயாக இருந்து வருவது எய்ட்ஸ் என்ற நோய். Acquired immunodeficiency syndrome என்பதன் சுருக்கமே எய்ட்ஸ்.

உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கியத்துவம் :-

எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும். இது ஒரு அபாயகரமான நோயாக உள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் நோய் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் உங்கள் உடலின் திறனை எச்ஐவி கிருமி குறைத்துவிடும்.

இப்படி உலகளவில், 38 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1984 முதல் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறியப்பட்ட நிலையில், 35 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்ஐவி அல்லது எய்ட்ஸ் தொடர்பான நோய் பாதிப்பால் இறந்துள்ளனர். இதன் மூலம் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான தொற்றுநோயாக மாறியது.

உலக எய்ட்ஸ் தினம் அதைச் சுற்றியுள்ள களங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், ஏற்கனவே நோயுடன் வாழ்பவர்களுக்கு கவனிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

Exit mobile version