இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

0
123

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிலும் நமது கைகளை சோப் அல்லது ஹேண்ட் வாஷ் அல்லது சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதிலும் கை விரல்கள் மற்றும் விரல்களின் நடுவில் மற்றும் நக இடுக்குகள் போன்ற இடங்களில் 30 வினாடிகளுக்கு குறையாமல் நன்றாக தேய்த்துக் கழுவுதல் வேண்டும். இவ்வாறு  அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் செல்வதை தவிர்க்க முடிகிறது. 

இதனால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் வீட்டில் வளர்க்கக் கூடிய செல்லப்பிராணிகளை தொட்டு அதனுடன் விளையாடிய பின்பு மற்றும் கழிப்பறைக்கு சென்று வந்த பின்பும் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்த பின்பும் அவசியம் கைகளை சுத்தமாகக் கழுவுதல் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு நன்கு புரிய வைத்தல் வேண்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் மற்றும் நமது வாழ்க்கை நமது கையில் போன்ற பழமொழிகளை மக்கள் மனதில் பதியும் படி எடுத்துச் சொல்வதே இந்த நாளில் சிறப்பம்சம் ஆகும்.  இதே போல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி இந்த உலக கை கழுவும் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.