இன்று உலக பார்வை தினம்:! இதற்கான முக்கியத்துவம்!

0
182

இன்று உலக பார்வை தினம்:! இதற்கான முக்கியத்துவம்!

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும்,சர்வதேச பார்வையற்ற தடுப்பு நிறுவனம் (IAPB) ஆகியவை இணைந்து பல்வேறு நோக்கங்களுக்காக அக்டோபர் 13ஆம் தேதி உலக பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கங்கள்:!

பார்வை குறைபாடு மற்றும் குருட்டு தன்மை ஆகியவை சர்வதேச பொதுப் பிரச்சனையாக கருதி இதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்நாள் முக்கியமாக கொண்டாடப்படுகிறது.

அரசாங்கங்கள் மற்றும் குறிப்பாக சுகாதார அமைச்சர்களை தேசிய குருட்டுத்தன்மை தடுப்பு திட்டங்களில் பங்கேற்பதற்கும் அதற்கான நிதியை ஒதுக்குவதற்கும் ஊக்குவிக்கும் வகையில் இத்தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குருட்டுத்தன்மையைத் தடுப்பது, VISION 2022 மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து இலக்கு பார்வையாளர்களுக்குக் கற்பித்தல் மற்றும் VISION 2022 திட்ட நடவடிக்கைகளுக்கான ஆதரவை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்த தினத்தை கொண்டாடும் விதமாக சமூக ஆர்வலர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.மேலும் சில பேர் இந்த தினத்தை போற்றும் வகையில் தீம் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.இன்றைய நாளில் குருட்டுத்தன்மை அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.அதற்கான வழிமுறைகளையும் உதவிகளையும் செய்வோம் என்ற உறுதி மொழியினை எடுத்துக் கொள்வோம்.