gold price: இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து இருக்கிறது.
இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது.
அதற்கு காரணமாக அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில். நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது இருந்தது. டிசம்பர்-3 அன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து இருக்கிறது.
அடுத்ததாக டிசம்பர்-4 தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. நேற்று டிசம்பர்-5 ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,140க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.57,120-க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று டிசம்பர்-6 தங்கம் ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து இருக்கிறது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்துக்கு ரூ.200 ரூபாய் குறைந்து ரூ. 56,920-க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த ஐந்து நாட்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்த வெள்ளி விலை ஒரு கிராமுக்கு இன்று ஒரு ரூபாய் உயர்ந்தது. இதனால், நேற்றும் இன்றும் விலையில் மாற்றம் இல்லை. எனவே ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு, ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.