gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையாகிறது.
இந்த வருடம் அக்டோபர் மாதம் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது, கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை குறையத்தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.1,160 குறைந்து இருக்கிறது.அதாவது, தங்கம் விலை டிசம்பர்-11 அதிரடியாக ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று டிசம்பர்-13 ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து இருக்கிறது.ஒரு கிராம் தங்கம் ரூ.7,230 க்கும் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.57,840 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று டிசம்பர்-14 ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.90 குறைந்தது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும். ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து இருக்கிறது.
அதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து இருக்கிறது. எனவே ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கு.ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சமாக விற்பனையாகி வருகிறது.