நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்!

0
108
Today only 187 trains across the country are affected! Information released by Indian Railways!

நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்!

நாட்டின் பல்வேறு மண்டலங்களில் இயற்கையான காரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் கோளாறுகள் காரணமாக மொத்தம் 187 ரயில்கள்
சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

187 ரயில்களில், 148 ரயில்கள் சில செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.பதான்கோட், லலித்பூர், கோடெர்மா, பர்கா கானா, பைத்யநத்தம், நெல்லூர், ஈரோடு, பக்வாரா சந்திப்பு, சிலிகுரி சந்திப்பு உள்ளிட்ட பல ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 148 ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஐ ஆர் சி டி சி யின் அறிவிப்பு படி 39 ரயில்கள் பகுதிநேர ரத்து செய்யப்பட்டன.மேலும், இன்று மாற்றியமைக்கப்பட்ட அல்லது திருப்பி விடப்பட்ட 29 ரயில்கள் குறித்தும் ரயில்வே தெரிவித்துள்ளது. சுமார் 22 ரயில்கள் திருப்பி விடப்பட்டதாகவும், 07 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாகவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.