தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் பருவமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு சில தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
அதன்படி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அதிக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.