Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரிஷப ராசிக்காரர்களா நீங்கள்! உங்களுக்கு தான் இன்னைக்கு அதிர்ஷ்டம்! எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

நாள் : 08.08.2020

தமிழ் மாதம்: ஆடி 24 சனிக்கிழமை.

நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம் 

காலை 09.00 முதல் 10.30 வரை.

எம கண்டம் 

மதியம் 01.30 முதல் 03.00 வரை‌.

குளிகன்

காலை 06.00‌ முதல் 7.30‌ வரை.

திதி:

பவுர்ணமி திதி இரவு 9.28 வரை அதன் பின் தேய்பிறை பிரதமை திதி.

நட்சத்திரம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மன குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாத பிரச்சினைகள் குடும்பத்தில் வரும். பிள்ளைகளால் அவ்வளவு மன நிம்மதி இருக்காது.தொழில் சம்பந்தமாக கூட்டு வியாபாரம் செய்யும் பொழுது அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு அதிகாலையிலேயே நீங்கள் ஆச்சரியப்படக்கூடிய விஷயங்கள் வந்து சேரும். பொருளாதாரம் மேலோங்கும். உறவினர்கள் உதவ முன்வருவார்கள். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. ஆச்சரியம் நிறைந்த நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.நண்பர்களின் உதவி தொழிலுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும். திடீரென வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக நல்ல மாற்றம் வரும். மனோபலம் அதிகரிக்கும். நம்பிக்கை கூடும் நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவை குறைக்கலாம். இன்று உங்களுக்கு மந்தமான உடல் நிலை ஏற்படும்.வெளியில் தொடர்புகள் மூலம் அனுகூலம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த ஒரு உதவி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். தெய்வ வழிபாடு செய்யும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று மிக கவனம் தேவை.உடல்நிலை சம்பந்தமாக ஒரு சில செலவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இன்றைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள். தெரியாதவரிடம் பேசுவதை குறைக்கவும். அமைதி காக்கும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக வரும்.உறவினர்களின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் அனுகூலம் தரும். சக ஊழியர்களுடன் நட்பு உறவு ஏற்படும். கொடுத்த கடனை இன்று வாங்கி விடுவீர்கள். தன வரவு வரும் நாள்.

துலாம்:

துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் புதிய பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் மன நிம்மதி உண்டு. மேல் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். எதிரிகள் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். தொழிலில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பொருள் வீடு வந்து சேரும் நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நல்ல மனிதர்களின் நட்பு நன்மையைத் தரும்.அலுவலகங்களில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செலவு தேடி வரும் நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் பலவீனமாக இருப்பீர்கள்.நிம்மதியற்ற ஒரு மாதிரியான சூழல் ஏற்படும்.பூர்வீக சொத்துகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலம் தேடிவரும். உறவினர்கள் துணை இருப்பார்கள்.எடுத்த காரியம் வெற்றி பெற பொறுமையாக செயல்படுவது நல்லது. அலைச்சல் வரும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். வம்பு, வழக்கு போன்ற விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வரும். தெய்வ வழிபாட்டை கடைபிடியுங்கள். முன்னேற்றம் ஏற்படும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பல பிரச்சனைகள் பல விதத்தில் இருந்து வரும் அதை எதிர்கொள்ள மன தைரியத்துடன் செயல்படுங்கள். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைத்து கொள்ளுங்கள். வாகனங்கள் இன்று உங்களுக்கு செலவு வைக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொறுமையுடன் செயல்படுங்கள். மனோ தைரியத்தை பெருக்கிக் கொள்ளும் நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் எல்லா காரியத்தையும் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்திருந்த உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தமாக கருவிகளை வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வேற்றுமொழி நபரால் அனுகூலம்வந்து சேரும். சுறுசுறுப்புடன் இருக்கும் நாள்.

Exit mobile version