Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

இந்தியாவில் விமானப்படையை பலபடுத்த ரஃபேல் போர் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி 2016 ஆம் ஆண்டு 58000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா,பிரான்ஸ் நாட்டில் உள்ள ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்க கூடிய டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பயது ,இதில் பல்வேறு ஊழல்கள் நடைப்பெற்றுள்ளது,கொள்முதலில் வெளிப்படை தன்மையில்லை என பல்வேறு குற்றசாட்டுகளுடன் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கியது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார் அதன்பின் இந்த வருடம் மே மாதத்தில் வழங்கபட இருந்த சில போர் விமானங்கள் கொரோனாவால் காலதாமதமானது.

இதனையடுத்து,நேற்று 5 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப பிரான்ஸ் முடிவு செய்தது. அதன்படி நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து இருந்து இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் புறப்பட்டன.நேற்று இரவு இந்த போர் விமானங்கள் அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.அதன் பின் இந்த போர் விமானங்கள் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்து இன்று இந்தியாவிற்கு வருகைதர உள்ளது.இதற்காக இந்தியாவில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள விமான தளத்தில் இந்த போர் விமானங்கள்
தரையிறங்குவதைக் கருத்தில் கொண்டு விமான தளத்தினை சுற்றி 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.மேலும் விமான தளத்தை சுற்றியுள்ள 4 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விமானம் தரையிறங்கும் சமயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது என்று அம்பாலா போக்குவரத்து துறை டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version