Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றைய ராசி பலன் 11-09-2020 Today Rasi Palan 11-09-2020

இன்றைய ராசி பலன்- 11-09-2020

நாள் : 11-09-2020

தமிழ் மாதம்:

ஆவணி 26, வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

பகல் 10.30 முதல் 12.00 வரை.

 எம கண்டம்:

மதியம் 3.00 முதல் 4.00 வரை.

குளிகன்:

காலை 7.30 முதல் 9.00 வரை,

திதி:

நவமி திதி பின்இரவு 04.20 வரை பின்பு தேய்பிறை தசமி.

நட்சத்திரம்:

நட்சத்திரம் பகல் 03.25 வரை பின்பு திருவாதிரை.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் இனிய நாளாக அமைய இருப்பதால் நன்மையே உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க சக நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் பெருகும். செலவுகள் குறைந்து காணப்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் கஷ்டங்களெல்லாம் தீர கூடிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் ராசிப்படி இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்க கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்கும் துணிச்சல் பிறக்கும். வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வராத கடன்கள் இன்று வசூலாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் அற்புதமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைய கூடிய வாய்ப்பு உண்டு.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பாராத திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய இனிய நாளாக அமையும். குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகையால் குதூகலம் காணப்படும்.புதிய தொழில் தொடங்குபவர்கள் பலரின் ஆலோசனை கேட்டு தொடங்குவது நல்லது.தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பொருளாதார நிலை ஒரளவுக்கு சுமாராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களின் வேடிக்கையான குணத்தினால் பலரின் மனதை கவர்ந்து விடுவீர்கள். உத்யோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் நல்ல நாளாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். எதிர்பாராத நபர்களின் மூலம் புதிய முயற்சிகள் முன்னெடுக்க கூடிய வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உடல் உபாதைகள் ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும்.

 

 

 

 

Exit mobile version