Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு! இன்றைய ராசி பலன்கள்

Today's zodiac benefits

Today's zodiac benefits

இவர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும்.தியானம் மேற்கொள்ளலாம்.பணியில் மூழ்கி விடுவீர்கள்.அதனால் நன்மை விளையும்.பெரியோரின் பேச்சை கேட்கவும்.பணப்புழக்கம் குறைவாக இருக்கும்.

ரிஷப ராசி:

     பிரார்த்தனைகள் பலன் தரும்.இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.பணி இடத்தில் நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.கவனமாக இருக்கவும்.சில விசயங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

மிதுன ராசி:

     உங்களுக்கு வளர்ச்சி தரும் செயல்களில் பங்கு கொள்ளுங்கள்.பங்கு வர்த்தகத்தில் லாபம் பார்க்கலாம்.பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள்.இன்று உற்சாகமான நாளாக இருக்கும்.கோவில்களில் பணம் செலவு செய்யலாம்.

கடக ராசி:

     உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும்.உங்களிடம் தொழில் சார்ந்த அணுகுமுறை இருக்கும்.அதனால் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் ஏற்படும்.நிதிநிலை சாதகமாக இருக்கும்.

சிம்ம ராசி:

     இன்றைய நாள் பரபரப்பாக இருக்கும்.யோகா செய்யலாம்.உங்கள் அறிவு திறனை பயன்படுத்தி செயல்படவும்.பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி:

     பல தடைகளை கடந்து பணியில் வெற்றி பெற வேண்டி இருக்கும்.உறவுகளில் விவாதம் ஏற்படும்.பண வரவும், செலவும் சேர்ந்து இருக்கும்.தியானம் மேற்கொள்வதால் ஆறுதல் அடையலாம்.

துலாம் ராசி:

     நம்பிக்கை இழக்காமல் இருந்தால் வெற்றி அடையலாம்.வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.பெரியோருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.கணிசமான தொகை குறையும்.

விருச்சிக ராசி:

     இன்று சிறப்பான நாள்.நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி தரும்.தன்னம்பிக்கை,உறுதியுடன் இருக்க வேண்டும்.உரையாற்றும் போது கவனமாக இருக்கவும்.பணவரவு இருக்கும்.

தனுசு ராசி:

     இன்று எதையும் அதிகம் யோசிக்க வேண்டாம்.பணியில் மகிழ்ச்சி இருக்காது.தடைகளை தாண்டும் ஆற்றல் உள்ளது.உறவில் குழப்பம் அடையலாம்.பணத்தை பத்திரமாக கையாளவும்.

மகர ராசி:

     உங்கள் தேவையின் முன்னுரிமை அறிந்து செயல்படுங்கள்.அதிக பொறுப்பாக நடந்து கொள்வீர்கள்.சூழ்நிலை சாதகமாக இருக்காது.பணம் செலவு இருக்கும்.

கும்ப ராசி:

     நன்மைகள் அதிகளவு காணப்படும்.முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும்.விருப்பங்கள் நிறைவேறலாம்.உங்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீன ராசி:

     இன்று அதிக நேரம் செயல் பட வேண்டி இருக்கும்.பொறுப்பின் காரணமாக நீங்கள் பணியில் மூழ்கி இருப்பீர்கள்.பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும்.

Exit mobile version