Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பங்குச் சந்தையில் எழுச்சி!! காளை ஆதிக்கம்!

ஆகஸ்ட் மாதத்தின் வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை எழுச்சி பெற்றது. அதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 748.31 புள்ளிகள் உயர்ந்து, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 203.65  புள்ளிகள் உயர்வு நிலை பெற்றது.

சென்செக்ஸ் நிஃப்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிட்ட நிறுவன பங்குகளுக்கு ஆதரவு அதிகம் இருந்தது. மேலும் வலுவான அன்னிய முதலீட்டு வருகை மற்றும் உலக சந்தையின் நேர்மறை குறிப்புகள் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது.

குறிப்பாக மார்க்கெட்  ஜாம்பவானாக இருக்கும்  ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி  ஆகியவை  நிறுவனங்கள் வலுவான ஏற்றம் பெற்று சந்தையில் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றியது.

ஐடி தவிர மற்ற அனைத்து துறை பங்குகளும் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பாக வங்கி வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் மீடியா பங்குகளும் அதிக வரவேற்பு இருந்தது

 

Exit mobile version