Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறந்தநாள் கொண்டாடும் பொம்மாயி!

பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட், ஹிந்தி மொழி மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் “அருந்ததி” படத்தில் வில்லனாக நடித்து தமிழ்சினிமாவுக்கு பரிச்சயமானார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர் மாடு வாங்க பணம் இல்லாமல் மகள்களை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழுத வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் அவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்ததன் மூலம் படங்களில் எல்லாம் வில்லனாக நடித்த சோனு சூட், அவரது நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக காட்சியளித்தார்.

இவ்வாறு ஏழை மக்களுக்கு தேடித்தேடி தனது சொந்தப் பணத்தின் மூலம் உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்ட சோனு சூட், இன்று தனது 42வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

அவருக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version