Gold news: தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் மீதான காதல் எந்த நிலையிலும் மக்களுக்கு மாறாது. விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் தங்கம் வாங்குவது பற்றியே கவலையில் இருப்பார்கள். தங்கமும், வீட்டு நிலமும் வாங்கி போட்டால் எப்போதும் அதன் மதிப்பு அதிகம் என கூறுவார்கள். தங்கத்தின் விலை அதிகரித்து மட்டுமே செல்கிறது.
அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மக்கள் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து செல்வதை கண்டு பெரும் வேதனை அடைந்துள்ளார்கள். அதே போன்று கடந்த மாதம் 30-ஆம் தேந்தி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.59,000-த்தை தாண்டி வரலாறு கந்த அளவிருக்கு உச்ச நிலையை எட்டியது. அப்படியே விலை எகிறி விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு பின் தங்கம் விலை சரிய தொடங்கியது. மீண்டும் தற்போது உயர்ந்து வருகிறது.