சுட சுட 10 முக்கிய தலைப்பு செய்திகள்!!

0
99

சுட சுட 10 முக்கிய தலைப்பு செய்திகள்!!

1:கிறிஸ்துமஸ் சிறப்பு விழா

பாஜக தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கம் ஜெயிண்ட் சார்ஜ் அரங்கத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று நடைபெறுகிறது.

2: அரசின் திட்டபணிகள் துவக்க நிகழ்ச்சி

திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் 6,800 கோடி செலவில்,பல்வேறு திட்ட பணிகளை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

3: திமுக நூற்றாண்டு விழா

இன்று சென்னை பெரியார் திடலில் மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் மற்றும் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

4: படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

இன்று மதியம் 2 மணிக்கு துணிவு படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்னும் பாடல் வெளியீடு.

5: கால் பந்து உலகக் கோப்பை!

பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இன்று
மோதுகிறது.

6: ரயில்சேவை ரத்து!

தொடர் கனமழையின் காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் கடும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை பாதை ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

7: பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையில் 112 வது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

8: மநீம பொதுக்கூட்டம்!

இன்று மதியம் 12 மணி அளவில் மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில், மநீம மாவட்டச் செயலாளர்கள்,நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

9: மர்மகோவா போர்க்கப்பல்!

மத்திய ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் மும்பையில் இன்று அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இன்று இந்திய கடற்படை சேர்க்கிறார்.

10: சிவாஜி கணேசன் புத்தக வெளியீடு!

இன்று இசைஞானி இளையராஜா சென்னையில் சின்மயா அரங்கத்தில் முனைவர் மருதுமோகன் எழுதிய சிவாஜி கணேசன் புத்தகத்தை வெளியிடுகிறார்.