இன்றைய கொரோனா பாதிப்பு….! 3536 குறைகிறதா கொரோனாவின் வேகம்……!

0
143

உலகளாவிய அளவில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்த அவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 10 லட்சமாக அதிகரித்து இருக்கிறது 11 லட்சத்து 11 ஆயிரம் நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த உயிர்க்கொல்லி நோய் குணமாக இன்று வரை சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே மிக அதிக அளவில் பரவி வருகின்றது தொற்றுக்கான தடுப்பு ஊசிகள் கண்டுபிடிப்பதில் உலகநாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். வெளிநாடு மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் உள்பட 3 ஆயிரத்து 536 பேர் தோற்றால் பாதிக்கப்படுகின்றனர் இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆறு ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 85 ஆயிரத்து 130 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன்படி பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 31 ஆயிரத்து 696 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது இன்று மட்டும் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 2095 நபர்கள் ஆண்கள் 1441 நபர்கள் பெண்கள் 192 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் இருக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் 49 பேர் கொரோனா தொற்றிற்க்கு பலியாகி உள்ளனர் 25 நபர்கள் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். அதேபோல 24 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்து உள்ளனர். ஆகவே பலியானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4515 நபர்கள் தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளனர். அவர்களின் மொத்த எண்ணிக்கையானது 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.