இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!
தென் இந்திய மக்கள் அதிகம் விரும்பி அணியும் தங்கம் கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.6000த்தை நெருங்கிவிடுமோ என்று நகைப் பிரியர்கள் கலக்கமடைந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் தங்கம் வாங்க இருந்தவர்கள் மகிழ்ச்சியில் நிம்மதி அடைந்தனர்.
மேலும் சில தினங்களுக்கு இதன் விலை இறக்கத்துடன் காணப்படுமா என்று எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,830க்கும், ஒரு சவரன் ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று விலை உயர்ந்து இருக்கின்றது. அதன்படி கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,850க்கும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
24 கேரட் கோல்ட்: நேற்று 1 கிராம் ரூ.6360க்கும், ஒரு சவரன் ரூ.50,880க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று விலை உயர்ந்து இருக்கின்றது. அதன்படி கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.6,382க்கும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.51,056க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளி: விலை மற்றம் இன்றி 1 கிராம் ரூ.76க்கும், 1000 கிராம் ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது நகைப்பிரியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.