Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றைய ராசி பலன் 27-08-2020 Today Rasi Palan 27-08-2020

இன்றைய ராசி பலன்- 27-08-2020

நாள் : 27-08-2020

தமிழ் மாதம்: 

ஆவணி 11, வியாழக்கிழமை,

நல்ல நேரம்: 

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.00 மணி முதல் 12.45 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

 எம கண்டம்:

காலை 6.00 முதல் 7.30 வரை.

குளிகன்:

மதியம் 9.00 முதல் 10.30 வரை,

திதி:

நவமி திதி காலை 09.25 வரை பின்பு வளர்பிறை தசமி.

நட்சத்திரம்:

கேட்டை நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு மூலம்

 

பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கெஜலட்சுமி விரதம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு பகல் 12.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். திடீர் வெளியிட பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்..

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்..

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உறவினர்களால் சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

Exit mobile version