இன்றைய ராசி பலன் 28-08-2020 Today Rasi Palan 28-08-2020

0
118

இன்றைய ராசி பலன்- 28-08-2020

நாள் : 28-08-2020

தமிழ் மாதம்:

ஆவணி 12, வெள்ளிக்கிழமை,

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

பகல் 10.30 முதல் 12.00 வரை.

 எம கண்டம்:

மதியம் 3.00 முதல் 4.30 வரை.

குளிகன்:

காலை 7.30 முதல் 10.30 வரை,

திதி:

தசமி திதி காலை 08.38 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி

நட்சத்திரம்:

மூலம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு பூராடம்

 

பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஆவணி மூலம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும். உங்கள் தேவைகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் நிம்மதி இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானம் தேவை. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் உத்தியோக ரீதியான எதிர்பாராத திடீர் வெளியிட பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.