Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

நாள் :  31 .7 .2020
தமிழ் மாதம்: ஆடி 16 வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 8 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 3 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை,
இரவு 8 மணி முதல் 10 மணி வரை.

ராகு காலம்: 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: 3 மணி முதல் 4.30 மணி வரை
திதி: துவாதசி திதி
நட்சத்திரம்: கேட்டை காலை 7.05 மணி வரை அதன் பின் மூலம்.
மரண யோகம் காலை 07.05 வரை பின் அமிர்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று வரலட்சுமி விரதம். இன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் மற்றவர்களை சேர்க்க வேண்டாம். உதவி செய்பவர்களால் காரியம் தடைபடும்.அலுவலகங்களில் மேலதிகாரியுடன் நிதானமாக செயல்படுங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.நீங்கள் எடுக்கும் எந்த காரியம் எதுவாக இருந்தாலும் உங்களது குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். சிந்தித்து செயல்படும் நாள்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் அதனால் புதிய வேலைகள் எதிலும் ஈடுபட வேண்டாம். வெளியில் செல்வதை தவிர்க்கவும்.உடல்நல ஆரோக்கியத்தில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் ஓட்டுவதில் கவனம் தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மிதுனம்:

இன்று உங்களது திறமையை மற்றவர்களுக்கு காட்டுவீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். அலுவலகங்களில் சக ஊழியர்களுடன் நட்பு ஏற்படும்.தொழில் ரீதியான அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுபட இன்று ஒரு நல்ல நாளாக அமையும். வெற்றிகள் உங்களை வந்து சேரும். அனுகூலமான நாள்.

கடகம்:

இந்த ராசி நேயர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். திருமண முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உங்களது நண்பர்களின் உதவி உங்களது வேலைக்கு மிகவும் உறுதியாகவும் உதவியாகவும் இருக்கும். வேலை பளு குறையும்.ஒருசிலருக்கு புதிய பொருள்களை வாங்கி கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும். பிரச்சினைகள் தீரும் நாள்.

சிம்மம்:

இந்த ராசியினருக்கு இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் உடனடியாக நிறைவேற்ற மற்றவர்களின் துணையை ஏற்பது நல்லது. அலுவலகங்கள் சம்பந்தமாக அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டுப் பெரியவர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. அலைச்சல் ஏற்படும் நாள்.

கன்னி:

பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் வரும்.உறவினர்களிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் உபாதைகள் ஏற்படலாம்.நண்பர்களின் உதவி உங்களது வியாபாரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவ முன்வருவார்கள். கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும் நாள்.

துலாம்:

இந்த ராசியினருக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் லாபம் கூடும். லாபகரமான நாள்.

விருச்சிகம்:

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும்.தொழிலில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டலாம்.எதிர்பாராத வீண் பிரச்சனைகளை இன்று சந்திக்க நேரிடும். பொறுமையாக இருப்பது நல்லது. தெய்வதரிசனம் உங்கள் மன நிம்மதியை அதிகரிக்கும். சிந்திக்கக்கூடிய நாள்.

தனுசு:

குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் நல்ல முடிவுகளுக்குப் உங்களது நண்பர்களே தடையாக அமைவார்கள். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உதவி கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள்.

மகரம்:

இன்று மனமகிழ்ச்சியுடன் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத பயணங்கள் செய்யும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். மன அமைதியான நாள்.

கும்பம்:

தேவையில்லாத பிரச்சினைகள் குடும்பத்தில் ஏற்படும். பிள்ளைகளால் மனக்கசப்பும் உண்டாகும். கையில் வைத்திருக்கும் பணம் கரையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டலாம்.உத்தியோகத்தில் இருந்து வந்த ஒரு சில பிரச்சினைகள் என்ற முடிவுக்கு வரும். உறவினர்கள் மூலம் உதவி  கிட்டும். லாபகரமான நாள்.

மீனம்:

திடீரென உறவினரின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகங்களில் உங்கள் உடன் வேலை செய்பவர்களுடன் ஒத்துப் போகும் நிலை அமையும். சொத்துக்கள் கைக்கு வர வாய்ப்புள்ளது. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாள்.

Exit mobile version