Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றைய ராசிபலன்!!  Today rasi palan!! ஜூலை 14/07/2023!!

இன்றைய ராசிபலன்!!  Today rasi palan!! ஜூலை 14/07/2023!!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளும் விலகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். செய்யும் செயல்களில் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் சற்று பார்த்து பழகுவது நல்லது.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிட்டும்.உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர் பதவிகளை அடைய முடியும். மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும்.

 

Exit mobile version