Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Token system to be re-introduced in Tirupati from today! Announcement released by Tirupati Devasthanam!

Token system to be re-introduced in Tirupati from today! Announcement released by Tirupati Devasthanam!

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது.

மேலும் இந்த டோக்கன் முறை மீண்டும் பின்பற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது.அதனால் பக்கதர்களுக்கு மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டது.மேலும் இந்த டோக்கன் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ,சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் 2 ஆகிய இடங்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு,திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20ஆயிரம் முதல் 25ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும்.மேலும் பக்கதர்களின் வருகையை பொறுத்து டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படும்.இந்த டோக்கன் முறை இன்று முதல் நடைமுறைபடுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Exit mobile version