சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

0
149

சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா முழுவதும் சுமார் 461 சுங்கச்சாவடிகள் உள்ளன.அதில் தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச்சாவடிகள் உள்ளன.

தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் என்றும் அந்த வகையில் 14 சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்த படுவதாகவும் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது புதிய விதிமுறை அல்ல என்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.8 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ள 14 சுங்கச்சாவடிகளின் விவரங்கள் பின்வருமாறு:

திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் – குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை ஆகிய 14 சுங்கச் சாவடிகள் ஆகும்.

ஏற்கெனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் மற்றொரு சுமையாக அவர்களின் தலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.