மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.. இன்றைய நிலவரம்!!
சென்னை, தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது. கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதத்தில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு படிப்படியாக விலை அதிகரித்தது. இம்மாதத்தின் தொடக்கத்தில் புதிய உச்சமாக தக்காளி கிலோ நூறு ரூபாயை எட்டியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பிறகு தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்த இவை கடந்த சில தினங்களாக மளமளவென உயர்வது மற்றும் சற்று குறைவதுமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று மற்றும் அதற்கு முன்தினமென்று 2 நாட்களாக ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்ட தாக்களி இன்று கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.150 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
மேலும் கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.150, இரண்டாம் ரகம் ரூ.140, மூன்றாம் ரகம் ரூ.130க்கு விற்பனையாகிறது.இதனை தொடர்ந்து சில்லறை விற்பனையில் தரத்திற்க்கேற்ப ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது.