Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகிழ்ச்சி தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை!

சமீபகாலமாக தமிழகத்தில் தக்காளியின் விலை தீவிரமாக அதிகரித்து வந்தது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

ஒரு கட்டத்தில் தங்கத்திற்கு ஈடாக தக்காளியின் விலை பேசப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனாலும் இந்த தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள், இந்த தக்காளி விலையை குறைப்பதற்கு மத்திய, மாநில, அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் நேற்று 1 கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 1 கிலோவிற்கு 35 ரூபாய் குறைந்திருக்கிறது.

சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை 65 ரூபாய் முதல் 70ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

பண்ணை பசுமை அங்காடியில் 1 கிலோ தக்காளி 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி இந்நிலையில் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிடுகிடுவென உயர்ந்து வந்த தக்காளியின் விலை தற்போது திடீரென்று சரிவதற்கான காரணம் என்ன? என யோசித்தால் சமீபகாலமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Exit mobile version