மழமழவென உயர்ந்த தக்காளியின் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி 

0
156
tomato price today in koyambedu market

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம்  ஒரு கிலோ தக்காளியானது ரூ.35-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை அதன் ரகத்திற்கு ஏற்ற வகையில் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல கடந்த வாரம் வெளி மார்க்கெட்டில் விற்கப்பட்ட தக்காளியானது சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையானது. அதே தற்போது விலையுயர்ந்து இன்று ரூ.80 வரை விற்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டிற்கு வெளியே தக்காளியின் விலையானது ரூ.90 வரையும் விற்கப்படுகிறது.

அதே போல பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ 38 ரூபாய்க்கும், கேரட் கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் கிலோ 52 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்க்கெட்டிற்கு தக்காளியின் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினமும் 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் என்று கூறப்படுகிறது. தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.