Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மலச்சிக்கல் குணப்படுத்தும் தக்காளி!!! இதன் மற்ற நன்மைகள் என்ன!!!

#image_title

மலச்சிக்கல் குணப்படுத்தும் தக்காளி!!! இதன் மற்ற நன்மைகள் என்ன!!!

மலச்சிக்கல் பிரச்சனையை மட்டுமில்லாமல் உடலுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் தக்காளியின் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டில் உள்ள சமையலறையில் இது இல்லாமல் ஒரு சமையலும் இருக்காது என்ற இடத்தை பிடித்துள்ள தக்காளியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கத்தை போல விற்பனை ஆகி வந்தது. அப்பொழுது தக்காளியை இப்படியும் பயன்படுத்த முடியும் என்று பலர் பலவகையாக தக்காளியை பயன்படுத்தி வந்தனர்.

தக்காளியை ரசம், சாம்பார், சட்னி, சாஸ், சாப்பாடு என்று அனைத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்த தக்காளியில் பல விதமான சத்துக்கள் உள்ளது. இந்நிலையில் போலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. அதே போல தக்காளியில் பலவிதமான மருத்துவ குணங்களும் உள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தக்காளி மூலம் கிடைக்கும் நன்மைகள்…

* நாம் பயன்படுத்தி வரும் காய்கறிகளில் தக்காளி எளிதில் ஜீரணிக்க கூடியது.

* நமக்கு சோம்பல், பலவீனம் ஏற்பட்டால் தக்காளியை பயன்படுத்தலாம். தக்காளி நமக்கு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பு அளிக்கும்.

* இதயம் தொடர்பான நாய்கள் இருப்பவர்கள் தக்காளியை எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தக்காளியை எடுத்துக் கொண்டால் அந்த பிரச்சனை நீங்கும்.

* தக்காளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும்.

* தக்காளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மேம்படையும். மேலும் கூர்மை உள்ளதாகவும் மாறும்.

* தக்காளியில் இரும்புச் சத்து அதிகளவில் உள்ளது. இதை சாப்பிடும் பொழுது தக்காளியில் உள்ள இரும்புச்சத்து விரைவில் உடலுக்குள் சேர்வதால் இரத்தசோகை நோய் குணப்படுத்தப்படுகின்றது.

* தக்காளியில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதால் இதை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.

* தக்காளியில் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய விட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது

Exit mobile version