Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Tomorrow is a holiday for schools and colleges! A sudden announcement by the District Collector!

Tomorrow is a holiday for schools and colleges! A sudden announcement by the District Collector!

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

மருது சகோதர்களின் நினைவு தினம் வரும் 27ஆம் தேதி காளையர் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய மக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதனை முன்னிட்டு அந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருபதற்காக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் மறுத்து சகோதர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி முதல் அடுத்த ஒன்பது நாட்களுக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் மது கடைகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு நாளை சிவகங்கை ,தேவகோட்டை,இளையான்குடி, மானாமதுரை,காளையார் கோவில்,திருவப்புவனம்,திருப்பத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மருது சகோதரர்களின் நினைவு தினத்தை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது.

Exit mobile version