Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை முதல் தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்-அரசு போக்குவரத்து கழகம்.!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர்.

எனவே,சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், இந்த முறையும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version