Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவ குணங்களை உடைய தக்காளி!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கும். மேலும் இது சுவையை மட்டும் அளிக்காமல் புத்துணர்ச்சியை அளிக்கும். தக்காளி சாப்பிடுவதன் மூலம் எளிதில் சீரணமாகும்.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, போலேட், நியாசின் உயிர்ச்சத்து, சாச்சுரேட்டட், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் தக்காளியில் அதிகம் உள்ளன. மேலும் ஈரல் கோளாறுகள் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் குணமளிக்கும்.

மேலும், தக்காளியை சமைத்து சாப்பிட்டாலும், சூப் வைத்து குடித்தாலும் உடல் மிகவும் பலப்படும். அதனை தொடர்ந்து மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த நிவாரணமாக உள்ளது. தேன் மற்றும் ஏலக்காய் தூள் கலந்து பருகினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

தக்காளி சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு சேர்த்து அருந்துவதன் மூலமாக அஜீரணம், மந்தம், உடலில் மிதமிஞ்சிய வாயு உற்பத்தி, மலச்சிக்கல் மற்றும் பித்தம் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். மேலும் ஒரு டம்ளர் தக்காளி சாறுடன் தேனும் சிட்டிகை ஏலக்காய் பொடியும் கலந்து பருகவேண்டும்.

இதன் காரணமாக நுரையீரல் கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. சிறுநீரக பையில் ஏற்படும் கல் மற்றும் வயிறு, சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும். தக்காளி அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்திலாம். உதாரணமாக பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவி முகம் வழவழப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மேலும், தக்காளி சாப்பிடுவதன் மூலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version