பல் சொத்தையாகி வலி எடுக்குதா? “கிராம்பு + உப்பு” இருந்தால்.. நிமிடத்தில் தீர்வு உண்டு!!

0
333
Tooth decay and pain? If you have "cloves + salt".. you have a solution in minutes!!

 

இனிப்பு உணவு,பற்களை பராமரிக்காமை போன்ற காரணங்களால் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.இதனால் அடிக்கடி பல் வலி,ஈறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலை உருவாகிறது.இந்த சொத்தைப்பல் வலியை போக்கும் அபூர்வ கை வைத்தியம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பல் சொத்தைக்கு வீட்டு வைத்தியம்

1)கல் உப்பு
2)கிராம்பு

முதலில் ஒரு தேக்கரண்டி கல் உப்பை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் மூன்று கிராம்பு போட்டு இடித்து தூளாக்கி கொள்ளவும்.இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து பற்களை துலக்கினால் சொத்தை பல் வலி குறையும்.

1)சோம்பு
2)கிராம்பு எண்ணெய்

ஒரு தேக்கரண்டி சோம்பை உரல் அல்லது மிக்ஸியில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கிராம்பு எண்ணெய் ஊற்றி இடித்த சோம்பை சேர்த்து கலக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இந்த நீரில் கிராம்பு எண்ணெய் சோம்பு கலவையை போட்டு கலக்கி வாயை கொப்பளித்து வந்தால் சொத்தைப்பல் வலி நீங்கும்.

1)பூண்டு
2)கிராம்பு எண்ணெய்

மூன்று பல் பூண்டை நசுக்கி கிராம்பு எண்ணெயில் கலந்து பற்களை தேய்த்தால் பல் வலி குறையும்.

1)கொய்யா இலை
2)புளி

ஒரு கொய்யா இலையை சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அதில் சிறிய துண்டு புளி வைத்து மடித்து சொத்தைப்பல் மீது வைத்து பற்களால் அழுத்தம் கொடுக்கவும்.இப்படி செய்தால் வலி குறைவதோடு சொத்தை பற்களில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

1)வேப்பிலை
2)வேப்பம் பட்டை
3)கல் உப்பு

ஒரு கைப்பிடி வேப்பிலையை உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.அதேபோல் 20 கிராம் வேப்பம் பட்டையை அதில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

பிறகு 1/2 தேக்கரண்டி கல் உப்பை மிக்ஸி ஜாரில் கொட்டி அரைத்து தூளாக்கி கொள்ளவும்.இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து ஸ்டோர் செய்து கொள்ளவும்.இதை வைத்து பற்களை துலக்கி வந்தால் சொத்தைப்பல் வலி நீங்குவதோடு சொத்தைப்பல் ஏற்படுவது கட்டுப்படும்.