உங்களுக்கு பல் கூச்ச பிரச்சனை இருந்தால் அலட்சியமாக கருதிவிடாதீர்கள்.பற்களில் உள்ள எனாமல் தேய்ந்து போவதால் இந்த பல் கூச்ச பிரச்சனை ஏற்படுகிறது.முறையாக பற்களை துலாக்காவிட்டால் பல் கூச்சம் ஏற்படும்.
இந்த பல் கூச்சத்திற்கு இயற்கையான முறையில் தீர்வு கண்டால் அது பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.பல் கூச்சத்தை போக்கும் இயற்கை வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தீர்வு ஒன்று
தேன்
பற்கள் துலக்கிய பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் நின்றுவிடும்.
தீர்வு இரண்டு
கிராம்பு
ஐந்து கிராம்பை இடித்து தூளாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து பற்களை துலக்கி வந்தால் பல் கூச்சம் ஏற்படுவது கட்டுப்படும்.
தீர்வு மூன்று
பூண்டு
இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை அரைத்து டூத் பேஸ்ட்டில் கலந்து பற்களை துலக்கினால் பல் கூச்சம் நிற்கும்.
தீர்வு நான்கு
உப்பு நீர்
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் உடனடியாக நிற்கும்.
தீர்வு ஐந்து
மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.பிறகு இதை வைத்து பற்களை நன்றாக துலக்கவும்.இப்படி தினமும் பற்களை துலக்கி வாய் கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் உடனடியாக நிற்கும்.
தீர்வு ஆறு
புதினா இலை
பல் கூச்சத்தை போக்க புதினா இலை பெரிதும் உதவுகிறது.ஒரு கைப்பிடி புதினா இலையை நன்கு காயவைத்து பொடியாக்கி பற்களை துலக்கி வந்தால் பல் கூச்சம் சரியாகும்.
தீர்வு ஏழு
பட்டை மற்றும் இலவங்கம்
பல் கூச்சத்தை போக்க பட்டை மற்றும் இலவங்கத்தை பொடியாக்கி பயன்படுத்தலாம்.